கிளிநொச்சி மாவட்ட இரணைமடு குளத்தில் தூண்டில் மீன் பிடிக்காக சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் ஜெயரூபன் என்பவரே சடலமாக இன்று (ஜூலை03) மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த குடும்பஸ்தர் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும் அவரது சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.