ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வவுனியா மாநகர சபையின் முதல்வராக சுந்தரலிங்கம் காண்டீபன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) மற்றும் பிரதி முதல்வராக பரமேஸ்வரன் கார்த்தீபன் (ஜனநாயக தேசிய கூட்டணி) இன்று (ஜூன் 16) தேர்வுசெய்யப்பட்டனர். இத்தேர்தல் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினியின் தலைமையில், மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

முதல்வர் பதவிக்காக நடந்த போட்டியில் சங்கு கூட்டணியைச் சேர்ந்த காண்டீபனுக்கு 11 வாக்குகள் கிடைக்க, தேசிய மக்கள் சக்தியின் சிவசோதி சிவசங்கருக்கு 10 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. எனவே, காண்டீபன் வெற்றி பெற்றார்.

பின்னர் நடைபெற்ற பிரதி முதல்வர் தேர்தலிலும், பரமேஸ்வரன் கார்த்தீபன் 11 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவருடன் போட்டியிட்ட சுயேட்சை உறுப்பினர் சிவசுப்பிரமணியம் பிரேமதாஸ் 10 வாக்குகளையே பெற்றார்.

வவுனியா மாநகர சபையில் தற்போது தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜனநாயக தேசிய கூட்டணி ஆகியவை இணைந்து ஆட்சி அமைத்துள்ளன.

Share this Article