கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டகல்லாறு பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம் பெற்று வருகின்றநிலைமையில் பொதுமக்களின் முறைப்பாடுகளையடுத்து களவிஜயம்மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடற்தொழில் அமைச்சரும் கிளிநொச்சி யாழ்மாவட்ட அபிவிருத்தி குழுதலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுடன் பாராளுமன்றஉறுப்பினர் ஜெ.ரஜீவன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் S. முரளிதரன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன் மற்றும் நீர்பாசனதினைக்களத்தின் உத்தியோகத்தர்கள்,ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளர்உள்ளிட்ட குழுவினர் இக் களவிஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.
இவ் விஜயத்தின் போது கருத்து வெளியிட்ட கடற்தொழில் அமைச்சர் அவர்கள்……
தொடர்ச்சியாக பல ஆட்சிகள் மாறிவந்த போதிலும் சட்டவிரோத மணல்அகழ்விற்கு நிரந்தர தீர்வு காண முடியாத நிலையில் தற்போதைய தேசிய மக்கள்சக்தியின் அரசாங்கத்தின் ஊடாக உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்எனவும் கல்லாறு பகுதியில் காணப்பட்ட பறவைகள் சரணாலயம் முற்றாகஅழிக்கப்பட்டு உள்ளதுடன் கடல் நீர் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு உள்வரும் அபாயநிலை தோன்றியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக மணல்அகழ்வு இடம் பெற்று வருவதனால் அப்பகுதியில் உள்ள வனப்பகுதி முற்றுமுழுதாக அழிவடைந்து காணப்படுவதனால் உடனடியாக இதனை கட்டுப்படுத்தும்நோக்கில் கல்லாறு பகுதியில் இராணுவ காவலரண்களை அமைத்து சட்டவிரோத மணல் அகழ்வினை முற்றாக கட்டுப்படுத்த நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். .