ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்புஎன மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு எனபெயர் சூட்டியமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மீண்டும் அந்த உப்பிற்கு ஆனையிறவு உப்பு என பெயர்சூட்டப்பட்டது.
குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது வடக்கு மாகாணத்தில்முதற்கட்டமாக விநியோகம் செய்யப்படும் என அறியமுடிகிறது.