ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படும் உப்பு ‘ஆனையிறவு உப்பு’ என சந்தைக்கு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு ‘ ஆனையிறவு உப்பு‘ என்ற பெயரைஙவழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கைத்தொழில்அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று உ செவ்வாய்க்கிழமை (ஜூன் 03) நடைபெற்றஅமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா 27/2 இன் கீழ்கடந்த அமர்வின் போது முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில்மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பின் பெயர் ரஜ உப்பு என்றுகுறிப்பிடப்படுகிறது. முழு சந்தை கட்டமைப்பையும் கைப்பற்றுவதற்காகவே இந்தபெயர் பயன்படுத்தப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் பிரதிநிதிகளின் வலியுறுத்தலுக்கு அமையஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை ‘ ஆனையிறவு உப்பு‘ என்று குறிப்பிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக ஒரு தரப்பினரை தவறாகவழிநடத்தியுள்ளார்கள். உப்பளத்தில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் குறித்துதொழிலாளர்களுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஆனையிறவு உப்பு தொழிற்சாலைக்கு அரசியல் பரிந்துரைகளுடன் நியமனங்கள்வழங்கப்படவில்லை. முறையான வழிமுறைகளுக்கு அமைவாகவேநியமனங்கள் வழங்கப்படுகின்றன. ஆகவே அரசியல் தலையீடு உள்ளது என்றுகுறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனையிறவு உப்பள தொழிற்சாலையின் ஒருசில சேவையாளர்கள்முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தால் உப்பு உற்பத்திக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தொழிலாளர்களின் நலன்புரி திட்டங்கள் குறித்து விசேட கவனம்செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

Share this Article