முல்லைத்தீவு குமுழமுனை ஆலய கேணியில் தவறி விழுந்து இரு மாணவிகள்உயிரிழப்பு!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் இன்றையதினம்(ஜூன் 01) படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில்ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கேணிக்குள் இறங்கி படமெடுக்கும் போது இருவரும் கேணிக்குள் தவறிவிழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம்10 இல் கல்விகற்கும் வித்தியானந்த கல்லூரி மாணவிகள் என்பதும்குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article