முல்லைத்தீவு மாவட்டத்தில் ‘சந்திரன் கிராமம்’ வீடுகள் கையளிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முல்லைத்தீவு  மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ்  நிர்மாணிக்கப்பட்ட ‘சந்திரன் கிராமம்‘ வீடு கையளிப்பு நிகழ்வானது இன்றையதினம்(மே 28) கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின்தலைமையிலும் இலங்கைக்கான இந்நிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் யாவ், நகரஅபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் கௌரவ அனுரகருணாதிலக மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன்ஆகியோரின் பிரதான பங்களிப்புடன் நடைபெற்றது.

குறித்த சந்திரன் கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால்   இந்தியஅரசாங்கத்தின் உதவியின் கீழ்  நிர்மாணிக்கப்பட்ட  24 வீடுகள் இலங்கைக்கானஇந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் யாவ் அவர்களால் இன்றையதினம்  கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article