முழங்காவிலில் பகுதி அரச காணிகளில் சட்டவிரோத கடைகள் – பூநகரி பிரதேச சபை அதிரடி நடவடிக்கை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பூநகரி – முழங்காவில் பகுதியில் சட்டவிரோதமாக அரச காணிகளைஇரவோடிரவாக பிடித்து கடைகளை நிர்மாணித்துவருபவர்களிற்கு எதிராக பூநகரிபிரதேச சபை சட்டநடவடிக்கைகளிற்கு தயாராகிவருகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்..

பூநகரி முழங்காவில் பகுதியில் நாச்சிக்குடா சந்தியை அண்மித்து மன்னார் – யாழ்ப்பாணம் வீதியோரமாக நேற்றுமுன்தினமிரவு முதல் அரச காணிகளில்கடைகள்  சில முளைத்துள்ளன. நிரந்தரமாக இரும்பினால் ஒட்டப்பட்டதும்தகரங்களால் வேயப்பட்டதுமானதாக அக்கடைகள் இருந்துள்ளன.

பொதுப்போக்குவரத்திற்கு அபாயத்தை தரக்கூடியதும் அனுமதியற்றதுமானகட்டுமானங்களை தயவு தாட்சணியமின்றி அகற்ற வடக்கு ஆளுநர் பணிப்புரைவிடுத்துள்ள நிலையில் அவை தொடர்பில் பொதுமக்களால் முறைப்பாடுகள்பூநகரி பிரதேசசபைக்கு செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து பிரதேச சபை செயலாளர் மற்றும் வருமான வரிபரிசோதகர்நிலைய பொறுப்பதிகாரி சகிதம் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.உரிமைகோரப்படாத நிரந்தர தகரக்கொட்டகைக்கு பகிரங்கமாக அகற்றுவதற்கானஎச்சரிக்கை அறிவித்தல்களை ஒட்டிய அதிகாரிகள் அருகாக தொடர்ந்து நிர்மாணவேலையில் ஈடுபட்டிருந்த மற்றைய வர்த்தக நிலையத்தினரிடம் அனுமதியைபெற்று வேலையை  முன்னெடுக்க கோரியிருந்தனர்.

இந்நிலையில் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் புகைப்படமெடுக்கமுற்பட்டவர்களை தாக்க முற்பட்ட அங்கிருந்த கும்பலொன்றுகைத்தொலைபேசியை பறிக்கவும் முற்பட்டுள்ளது.இதனையடுத்து அவர்களைஎச்சரித்த அதிகாரிகள் காவல்துறையில் முறையிட்டனர்.

அதனையடுத்து சம்பவ இடத்திலிருந்தவர்களை காவல்நிலையத்திற்கு தருவித்தபொலிஸார் எச்சரிக்கை விடுத்ததுடன் கைது செய்ய முற்பட்டிருந்தனர்.எனினும்அதனை  மறுதலித்த பிரதேசசபை செயலாளர் சட்டவிரோத கட்டுமானங்களைமுன்னெடுக்கவேண்டாமெனவும் உரிய அனுமதியை பெற்ற பின்னர் பணிகளைமுன்னெடுக்கலாமெனவும் தெரிவித்து வெளியேறியதாக தெரியவருகின்றது.

Share this Article