மன்னார்- அச்சங்குளம் கடற்கரையில் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்பு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம்கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய்ஒருவரின் சடலம் ஒன்று நேற்று (மே 22) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிப்பாய் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவமானது அச்சங்குளம் கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்டகடற்படையின் கண்காணிப்பு காவலரணில் இடம் பெற்றுள்ளதாகதெரியவருகிறது.

சம்பவ இடத்திற்கு முதல் கட்ட விசாரணைகளுக்காக முருங்கன் பொலிஸார், தடயவியல் நிபுணர்கள், சென்று பார்வையிட்டனர்.

பின்னர் மன்னார் மாவட்ட நீதிபதி சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளின்பின்னர் உடல் நேற்று மாலை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

உயிரிழந்த கடற்படை சிப்பாய் 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனதெரியவந்துள்ளதாகவும்

குறித்த கடற்படை சிப்பாய் வங்காலை மற்றும் அச்சங்குளம் கடற்படை முகாமில்பணியாற்றி உள்ளார் எனவும் தெரியவருகின்றது.

இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில்மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article