வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் பலி !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (ஏப்ரல்14) மாலை இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, சிதம்பரபுரத்தில் தற்காலிகமாக வசித்து வந்த இளைஞர் ஒருவர்தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு தனதுஉறவினர்களுடன் வருகை தந்திருந்த நிலையில் குறித்த இளைஞர் நீச்சல்குளத்தில் குளித்துள்ளார்.இதன்போது, அவர் நீரில் மூழ்கியுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு வவுனியாவைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கண்டி, நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞரேஉயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர்வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்துவர்த்தக நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்த நிலையில் இவ்வாறுஉயிரிழந்துள்ளார்.

வவுனியாவின் பிரதான வைத்தியசாலையின் பிரேத அறை குளிரூட்டி நீண்டநாளாக பழுதடைந்து இருந்தால் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன்

இன்று (ஏப்ரல்15) உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம்ஒப்படைக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Share this Article