மடு பிரதேச குஞ்சுக்குளத்தில் அருவி ஆறு சுற்றுலா வலயம் திறந்து வைப்பு.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மடு பிரதேச   செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்தில் அருவிஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட ‘அருவி ஆறு சுற்றுலா வலயம்‘ கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 08)    மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்க.கனகேஸ்வரன் தலைமையில்   திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது அருவியாறு சுற்றுலா வலய பெயர்ப்பலகை திரைநீக்கம்செய்யப்பட்டதுடன் தொங்கு பாலமும் திறந்து வைக்கப்பட்டது.

மடு பிரதேச   செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் பகுதிக்கு நாட்டின் பலபாகங்களில் இருந்தும்,புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பார்வையிடுவதற்காகவந்து செல்வது வழமை.

குறித்த நிகழ்வில் வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் பத்திநாதன் மற்றும்வடமாகாண சுற்றுலாத்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள், நானாட்டான்பிரதேச சபை செயலாளர் மற்றும் அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டுகுறித்த  சுற்றுலா வலயம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article