ஆட்டைகடித்து கொன்ற நாயை தூக்கிலிட்ட பெண் கைது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மாங்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள ஒட்டுசுட்டானில் ஆட்டைகடித்து கொன்றநாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு தீர்ப்பு ஒன்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி26) வழங்கியதையடுத்து நாயை தூக்கிலிட்டுகொன்று சமூக ஊடகங்களில் பதிவேற்றிய 49 வயது பெண் ஒருவரை மிருகவதைசட்டத்தின் கீழ் பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவரது ஆடு ஒன்றை அந்த பகுதியைச் சேர்ந்தஒருவரின் நாய் கடித்து விட்டதாக பொலிஸில் முறையிட்டுள்ளார், இதுதொடர்பான விசாரணையை ஒட்டுசுட்டான் இணக்கசபைக்கு பொலிஸார்மாற்றினார்.   

இதனையடுத்து, குறித்த முறைப்பாடு தொடர்பாக இணக்கசபையில் ஆட்டிற்கானநஷ்டத்தை வழங்குமாறு கோரிய நிலையில் நாய் உரிமையாளர் தன்னிடம் பணம்இல்லை என தெரிவித்த நிலையில் அதற்காக நாயை தருமாறு ஆட்டின்உரிமையாளர் கேட்டுக் கொண்டதையடுத்து நாயை ஒப்படைக்க நாய்உரிமையாளர் உடன்பாடு தெரிவித்து நாயை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து நாயை கொண்டு சென்ற ஆட்டின் உரிமையாளர் குறித்த நாயைதூக்கிலிட்டு கொன்று அதன் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றம்செய்ததுடன் அதனை இணக்கசபை நீதவான்களுக்கு அனுபியுள்ளார்.

இதனையடுத்து நாயை தூக்கிலிட்டு கொன்ற பெண்ணை மிருகவதை சட்டத்தின்கீழ் நேற்று (ஜனவரி 27) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Share this Article