எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 33பேர் கடற்படையினரால் கைது!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் கடற்படையினர் இன்று(ஜனவரி26) காலை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது அத்துமீறிநுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 33 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதுடன் அவர்கள் வந்த மூன்று படகுகளையும் கடற்படைகைப்பற்றியுள்ளது.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் குழுவையும் அவர்களது படகுகளையும்கரைக்கு கொண்டு வந்த பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சிமீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று கடற்படைதெரிவித்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மற்றும் இந்திய கடற்றொழிலாளர்கள்இரணைதீவுக்கு கொண்டு வரப்பட்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காககிளிநொச்சி மீன்வள உதவி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Share this Article