ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, வன்னி தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் முதன்மை வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த, கிறிஸ்தோபர் டினேஸ் றொசின்ரன், மதுர பிரபோத் ஹேரத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்த அந்தோனிப்பிள்ளை ஜெயராஜ், வின்சன்டிபோல் அருள் நாதன், சின்னத்துரை கலாநிதி ஆகியோர்,

மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த ஞானப்பிரகாசம் மரியசீலன், முருகேசு கதிர்காமநாதன், இந்திரகுமாரன் செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Share this Article