முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்த இந்தியதுணைத்தூதுவர்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணத்திற்கான  இந்திய துணைத்தூதுவர் கெளரவ சாய் முரளி அவர்கள்நேற்றையதினம் (செப். 05)  முல்லைத்தீவு  மாவட்ட  செயலகத்துக்கு விஜயம்செய்தார். இதன் போது அரசாங்க அதிபர்  திரு.அ.உமாமகேஸ்வரன்  அவர்களை  சந்தித்து மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள்  தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இக்கலந்துரையாடலின்போது   அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும்திட்டங்கள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும்பல்வேறு சவால்கள் பிரச்சினைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில்காணப்படும் பல்வேறு அபிவிருத்தித் தேவைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு  மாவட்ட அரசாங்க அதிபரினால் யாழ்ப்பாணத்திற்கான  இந்தியத்துணைத்தூதுவரிற்கு  விபரிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்திரு.எஸ்.குணபாலன், யாழ். இந்திய துணைதூதரகத்தின் இணைப்பாளர்ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Share this Article