முல்லைத்தீவில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட மூவர் கைது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கைவேலி 1ம்வட்டாரம் மருதமடு பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கிராம அபிவிருத்திசங்கதலைவர் உட்பட மூவர் பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டசம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கைவேலிபகுதியில்

தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களை ஓர் இடத்தில் ஒன்றுதிரட்டி காணிஇல்லாதவர்களுக்கு காணி வழங்குவதாகவும், வேலை வாய்ப்புகள்பெற்றுக்கொடுப்பதாகவும்  வாக்குறுதிகளை கூறி மக்களிடம் 200 ரூபாய்  பெறப்பட்டு படிவம் பூரணப்படுத்தப்பட்டுள்ளது.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முல்லைத்தீவு மாவட்டதேர்தல் அலுவலகத்தினை சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் புதுக்குடியிருப்புபொலிஸாரும் இணைந்து அவர்களிடம் இருந்த படிவங்களை பறிமுதல்செய்ததுடன் ஒரு கட்சியை சேர்ந்த இருவர் மற்றும் வீட்டு உரிமையாளர் உட்படமூவர் கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துசெல்லப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்புபொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article