சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மரக்கடத்தல் முறியடிப்பு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மரக்கடத்தல் நடவடிக்கைமுறியடிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குஉட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் வீதிச் சோதனையில் ஈடுபட்டபொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாகபுதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப்ரகவாகனம் சோதனையிடப்பட்டது.

இதன்போது சூட்சுமமான முறையில் வாகனத்தின் அடிப்பகுதியில் மறைத்துகொண்டு செல்லப்பட்ட பெறுமதி மிக்க 32 பாலை மர குற்றிகள்மீட்கப்பட்டுள்ளன.

மேலும் கப்ரக வாகனத்தின் சாரதியும் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளைமுன்னெடுத்துள்ளனர்

Share this Article