மரண அறிவித்தல் – திரு.சுந்தரலிங்கம் பன்னீர்செல்வன்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கிழக்கைப்  பிறப்பிடமாகவும் இல. 59, மருதடி , யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு.சுந்தரலிங்கம் பன்னீர்செல்வன் (பன்னீர் – ஆசிரியர் , நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாலயம், பழைய மாணவன், யாழ் இந்துக் கல்லூரி 92 Batch)  அவர்கள்  12.08.2024 திங்கட்கிழமை இறைபதமடைந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் மற்றும் சரஸ்வதி இணையரின் அன்பு மகனும் ஜெயறஞ்சன், திலகவதி இணையரின் பாசமிகு மருமகனும் , ஜெயறஞ்சினி அவர்களின் அன்பு கணவரும் லிணோஷ்றாம், லக்‌ஷானி, கரிஷ்றாம்  ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

பாமினி (UK) , தமிழ்மாறன்  (UK), காலஞ்சென்ற குமுதினி  (ஆசிரியை UK), சாந்தினி  (UK) ஆகியோரின் சகோதரரும் மூர்த்தி(UK) , கௌரி  (UK), லக்ஸ்மன்  (UK) ஆகியோரின் மைத்துனரும் திவாகர்(Oman) ஜெயமாலினி, றஞ்சத், தேவகுமார், இதயகுமார்(அசோக்) ஆகியோரின் அத்தானும் கார்த்திகா ( Oman)வின் அண்ணாவுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் (15.08.2024) வியாழக்கிழமை காலை 10.00  மணியளவில்   மாணிக்கம் வைரவர் வீதி, சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம் எனும் முகவரியில் உள்ள மனைவியின் இல்லத்தில் இடம்பெற்று தகனக் கிரியைக்காக  திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்

குடும்பத்தினர்.

0753185628

0779591327

 

Share this Article