நெடுந்தீவு மேற்கு 01 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி காந்திதிலகர் திலகவதி அவர்கள் 28.04.2026 செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காந்திதிலகர் அவர்களின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்றவர்களான தனுக்கோடி வள்ளியம்மை தம்பதியினரின் மகளும் நாகராசா பாக்கியம் தம்பதியினரின் மருமகளும் கீதா (ஊழியர்,இலங்கை மின்சார சபை, கிளிநொச்சி) சுகிர்தா, தசாங்கன் (நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, நெடுந்தீவு) ஆகியோரின் பாசமிகு தாயாரும் தயானந்தன், துஷியந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும் துவிக்ஷனின் அருமை பேத்தியுமாவார்.
தருமரட்ணம், குணேஸ்வரி, துரைராசா, லோகராணி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், தருமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், நல்லம்மா, காலஞ்சென்ற மார்க்கண்டு, விஜயகுமாரி, இலட்சுமி, லோகேஸ்வரி, பாலச்சந்திரன்,கனகராசா, புவனேந்திரராசா, கனகரத்தினம், கமலாதேவி,சிவசுப்பிரமணிம் ஆகியோரின் மைத்துணியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30.04.2026 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று தகனக் கிரியைக்காக பூதவுடல் பகல் 12.30 மணியளவில் பனங்காணி ஆற்றங்கரை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.