வவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்துநெரிக்கப்பட்டு கொலை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வவுனிக்குளத்திலிருந்து நேற்று (ஜூலை30)  சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டசட்டவைத்திய அதிகாரி அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியினை சேர்ந்த ஆனந்தரசா ஜீவன் என்றஇளைஞன் 27 வயதான இளைஞரே வவுனிக்குளத்திலிருந்து சடலமாகமீட்கப்பட்டார்

நேற்று முன்தினம்(ஜூலை29) இரவு  ஒரு தொகை பணத்துடன் யோகபுரத்தில்  இருந்து பாண்டியன் குளம் சென்ற குறித்த  இளைஞனை காணவில்லை எனஉறவுகள் தேடிய நிலையில் நேற்று (ஜூலை30) அதிகாலைவவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகைதந்து சடலத்தை  பார்வையிட்டமுல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ் ஏச் மக்ரூஸ் உடலத்தை உடற்கூற்றுபரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று (ஜூலை31) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின்உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெற்றது. 

உடற்கூற்றுப் பரிசோதனையின் முடிவில் குறித்த இளைஞன் கழுத்து நெரித்துகொல்லப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின்  அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நட்டாங்கண்டல்  பொலிஸார்  மேலதிக விசாரணையைமுன்னெடுத்து வருகின்றனர்

Share this Article