செல்வம் அடைக்கலநாதனை குழுத் தலைவராக நியமிக்க கடிதம் மூலம் வேண்டுகோள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமிக்க உங்களது ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குமாறு தமிழரசுக் கட்சி, புளொட் அமைப்பு மற்றும் ரெலோவின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் ஆகியோரிடம் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனை கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தனது ஆதரவை அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் ஒற்றுமையாக செயல்பட விரும்புகின்றதால், நாடாளுமன்ற சிரேஷ்ட தன்மையின் அடிப்படையில் செல்வம் அடைக்கலநாதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்ய ஆதரவை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this Article