சிறப்புற நடந்த முல்லைத்தீவு மாவட்ட தொழில் முயற்சியாளர்களின் விற்பனைக்கண்காட்சி – 2024

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ் சமூக செயற்பாட்டு மையம் மற்றும் சிறு தொழில் அபிவிருத்திப் பிரிவு, பிரதேச செயலகம் கரைதுறைப்பற்று  இணைந்து முல்லைத்தீவு மாவட்டத்தின்தொழில்  முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனைக் கண்காட்சிநேற்றையதினம் (ஜூலை08)    முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைமுன்றலில் நடைபெற்றது.

இந்த விற்பனைக் கண்காட்சியில் உணவு உற்பத்திகள், ஆடை உற்பத்திகள், பனைசார் உற்பத்திகள், தோற்பொருள் உற்பத்திகள், விவசாய உற்பத்திகள், கைப்பணி உற்பத்திகள், அழகுக் கலை தொடர்பான சேவைகள், வியாபாரஆலோசனைகள் முதலான விடயங்கள் இடம்பெற்றன.

இந்த விற்பனைக் கண்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதுடன்உள்ளூர் உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Share this Article