வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குப்பட்ட பரந்தன்  பூநகரி வீதியில் இன்று(ஜூலை06) மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர்உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப்ரக வாகனமும்யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும்குடமுருட்டி பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துஇடம்பெற்றுள்ளது

விபத்தில் கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையகோ.புருசோத் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவ இடத்தில்உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில்.   வைக்கப்பட்டுள்ளதுடன்  விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article