நீராடச் சென்று காணாமல் போயிருந்த சிறுவன் சடலமாக மீட்பு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவர் காணாமல் போனநிலையில் இன்று (ஜூன்30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி  இரணைமடுக் குளத்தில் நீராடுவதற்காக காணாமல் போனசிறுவனும், அவரது சகோதரன் மற்றும் இரு நண்பர்களும் சென்றநிலையில்

இவர்களில் குறித்த சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில், அருகில் உள்ள இராணுவமுகாமிற்கும், உறவினர்களிற்கும் ஏனைய சிறுவர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சிறுவனை தேடும் பணியில் இரணைமடு மீனவர்களுகும், பிரதேச மக்களுமாக நீண்ட நேரமாக ஈடுபட்ட போதும் நேற்று மீட்க முடியாதுபோனது.

இன்று மீண்டும் தேடப்பட்ட நிலையில் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.

திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி கற்று வந்த முறிகண்டிவசந்தநகர் பகுதியை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Share this Article