வவுனியா தொழிற்சாலையில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வவுனியா, மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையுடன் இணைந்தகளஞ்சியசாலை ஒன்றில் திங்கட்கிழமை (ஜூன்24) மாலை திடீரென தீ விபத்துஏற்பட்டுள்ளது.

வவுனியா, மரக்காரம்பளை பகுதியில் அமைந்துள்ள அலுமினியம் மற்றும்பிளாஸ்டிக்கு தொழிற்சாலை மற்றும் வீட்டு தளபாடங்களின் களஞ்சியசாலைஎன்பவற்றை உள்ளடக்கிய தொழிற்சாலையிலேயே இவ்வாறு தீவிபத்துஏற்பட்டுள்ளது.

தொழில்சாலையில் பணி புரிந்த இருவர் சாப்பாட்டுக்காக வெளியில் சென்றநிலையில் இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தையடுத்து வவுனியாநகரசபை தீயணைப்பு பிரிவினர், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் அப் பகுதிமக்களுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நீர்தாரை வீசிநடவடிக்கை எடுத்திருந்தனர்.

எனினும் தீ விபத்தில் தொழிற்சலை முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில்நாசமாகியுள்ளது.இந்நிலையில் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்துஈச்சங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Share this Article