வவுனியா வைத்தியசாலையில் கர்ப்பவதி தவறி வீழ்ந்ததில் தாயும் சிசுவும் மரணம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த  கர்ப்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுடன், அவரதுவயிற்றில் இருந்த சிசுவும் மரணமடைந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

மதவாச்சி பகுதியைச் சேர்ந்த நிறைமாத  கர்ப்பிணித்தாய் ஒருவர் வவுனியாவைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் இன்று திங்கட்கிழமை (22) விடுதியில் உள்ள குளியலறைக்குசென்றநிலையில் தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவர்மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து, அவர் மீட்கப்பட்டு அவரது வயிற்றில் உள்ள குழந்தையைகாப்பாற்றுவதற்கான சத்திரசிகிச்சையினை வைத்தியர்கள்மேற்கொண்டுள்ளனர்.எனினும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக அறிவதற்காக வவுனியா வைத்தியசாலைபணிப்பாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் அதுபலனளிக்கவில்லை. 

உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியாவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share this Article