கரோல் தனிப்பாடல் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

ஊர்காவற்றுறை பங்கில் கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் புது வருடத்தை முன்னிட்டு புனித யோசவ்வாஸ் இளையோர் ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட கரோல் தனிப்பாடல் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று(ஜனவரி 1) ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் ஆலய பங்கு பணிமனையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்குதந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அடிகளார் பிரதம விருந்தினராகவும், ஊர்காவற்துறை திருக்குடும்ப கன்னியர் மட முதல்வி அருட்சகோதரி தயாநாயகி செபமாலை அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் மற்றும் ஊர்காவற்துறை புனித மரியாள் றோ.க மகளீர் வித்தியாலய அதிபர் அருட்சகோதரி நிர்மலறஞ்சினி பாலசிங்கம் மற்றும் புனித அந்தோனியார் ஆலயத்தை சேர்ந்த திரு. அன்ரனி லூக்காஸ் திரு .சாள்ட்டன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைக்கப்பட்டதுடன் நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர்கள் பங்கு மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article