கோப்பாய் ஆசிரிய கலாசாலை மாணவர்களின் இறுதிப் பரீட்சை மூலச் சான்றிதழ் நாளை விநியோகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் 2018/2019 மற்றும் 2019/2020 கல்வியாண்டு அணியினரின் இறுதிப் பரீட்சை மூலச் சான்றிதழ் (original certificates) கலாசாலையில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை நாளை (ஜனவரி 2) அல்லது நாளை மறுதினம்(ஜனவரி 3) ஆகிய இருதினங்களும் காலை 10 மணிக்கும் பிற்பகல் 3 மணிக்கும் இடையில் பெற்றுக் கொள்ளமுடியும்.

பெற்றுக் கொள்ள வரும்போது தேசிய அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என்பதுடன் பரீட்சார்த்தி சார்பில் யாராவது பெற்றுக் கொள்வதாயின் அடையாள அட்டையின் மூலப்பிரதி முக்கியமானது அத்துடன் கோரிக்கை கடிதம் எழுதி இன்னாரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தலாம்.

அவரது அடையாள அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும். ஏனைய சான்றிதழ் கிடைக்கப்படாத அணியினருக்கான சான்றிதழ்கள் கூடிய விரைவில் பரீட்சை திணைக்களத்தால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article