இலங்கை வங்கி உத்தியோகத்தர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இலங்கை வங்கி உத்தியோகத்தர் ஒருவர் திடீரென உயிரிழந்தந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மந்திகை தம்பசிட்டி மாயக்கை பிள்ளையார் கோயிலடி பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரலிங்கம் மதனகுமார் (வயது 41) என்பவரே உயிரிழந்தந்துள்ளார்.

ஒட்டுசுட்டான் இலங்கை வங்கி உத்தியோகத்தராக பணிபுரியும் குறித்த நபர் நேற்று(டிசம்பர் 23) சனிக்கிழமை பேரூந்தில் இறங்கி, கொடிகாமம் பகுதியில் உள்ள உணவகத்தில் தேநீர் அருந்திவிட்டு வெளியில் வந்த போது நெஞ்சு வலியால் கீழே விழுந்துள்ளார்.

அங்கிருந்து முச்சக்கர வண்டியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வசல் பகுதியில் நெஞ்சு வலி கூடிய நிலையில் உயிரிழந்தந்துள்ளதாக தெரிய வந்துள்ளதுள்ளது.

இன்று(டிசம்பர் 24)மரண விசாரணையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Share this Article