மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்!- மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் முன்னாள் ஆணையாளரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,ஜனநாயக நாடு என்ற அடிப்படை யில் மாகாண சபை அவசியம். மாகாண சபை இந்நாட்டுக்கு அவசியமில்லை என யாராவது குறிப்பிடுவார்களாயின் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை தேவையும் இல்லை.

மாகாண சபை மக்கள் கூட்டிணைப் பற்ற அரச அதிகாரிகளால் செயற்படுத்தப்படுகின்றது. இதனால் மாகாண சபை குறித்தான கேள்வியொன்றை எழுப்பும் போது அரச அதிகாரிகள் அதற்கு நேரடி யாக பொறுப்பேற்காமல் இருக்கின்றனர்.

மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் இந்நிலை மாற்றமடைந்திருக்கும்.தற்போது மாகாண சபை செயற்திட்டங்களில் மக்கள் கருத்துக்களை கேட்டறிய வாய்ப்பு இல்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை தெரிவு செய்தலை உடன் மேற்கொள்ள வேண்டும்.

அநேகமானோர் மாகாண சபை வெள்ளை யானை என தெரிவித்து வருவதுடன், மாகாண சபை உறுப்பினர்களை பராமரிக்க அதிக நிதி வீணடிக்கப்படுவதாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.

அவர்களின் பராமரிப்புக்கு அரச வருமானத்தில் ஒரு வீதமளவே செலவாகுகின்றது எனவும் தெரிவித்தார்.

Share this Article