நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் ஒளி விழா எதிர்வரும் 27 இல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் ஒளி விழா நிகழ்வுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 04:30 மணிக்கு தூய யுவானியார் ஆலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளார் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் மலரும் முல்லை அமையத்தின் இயக்குனரும் அமைதித் தென்றல் அமையத்தின் உதவி இயக்குனருமான அருட்பணி S.J.ஜீவரெட்ணம் அமதி அடிகளார் முதன்மை விருந்தினராக சிறப்பிக்கவுள்ளார்.

மறைப்பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் பக்திச்சபைகளின் கலைநிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article