நாட்டில் கொவிட் தொற்றால் ஒருவர் மரணம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நாட்டில் கொவிட் மரணம் ஒன்று பதிவாகியுள்ளது.

கம்பளை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று கண்டி தேசிய வைத்தியசாலை தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் நேற்று உயிரிழந்துள்ளதாகவும், எனினும் கொவிட் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் அவரிடம் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், உயிரிழந்த குறித்த நபர் கொவிட் தொற்றால் உயிரிழந்தமை உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

Share this Article