மாணவர்களுக்கான தொழில் கல்வி விண்ணப்பம் கோரல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

ஊழியர் நம்பிக்கை நிதிய சபையின் நிதி உதவியுடன் தொழில் கல்வி வழங்குவதற்கான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆர்வமான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஊழியர் நம்பிக்கை நிதிய சபையின் கீழ் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு ( E T F ) பங்களிப்பு செய்யும் பெற்றோர்களை கொண்ட க.பொ.த (உ/த) 2022 பரீட்சையை நிறைவு செய்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்கே இந்த நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

க.பொ.த (உ/த) 2022 பரீட்சைக்குத் தோற்றி உயர்கல்விக்கு தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்கான தொழில் பயிற்சி (On Job Trainings) கல்வி பெறுவதற்காக ஊழியர் நம்பிக்கை நிதிய சபையினால் (E T F ) நடைமுறைப்படுத்தப்படும் “Nipunatha Saviya” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பொருத்தமான மாணவர்கள் தங்கள் பிரிவு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரை 22.12.2023 ஆம் திகதிக்கு முன்னர் தொடர்பு கொண்டு தங்கள் விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு காரைநகர் பிரதேச செயலகத்தினர் அறிவித்துள்ளனர்.

Share this Article