சமூக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அடுத்த ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களுக்கு செல்கின்ற மாணவர்களை கட்டாயமாக நான்கு மாதங்கள் சமூக சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், அடுத்த ஆண்டு 41,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்களில் வன்முறைகளை தவிர்த்து, கல்வி நடவடிக்கைகளை ஸ்திரப்படுத்தும் நோக்கில், உள்வாங்கப்படும் மாணவர்களை அவர்கள் தெரிவு செய்யும் துறைகளுடன் தொடர்புபட்ட 4 மாதகால சமூக சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Share this Article