கோப்பாயில் தோட்டக் கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய கதிர்காமநாதன் நிரோசன் என்பவரே நேற்று (டிசம்பர் 15) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் கடந்த 13ஆம் திகதி 4மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞனை உறவினர்கள் தேடி வந்த நிலையில் தோட்டக் கிணற்றில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share this Article