முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முச்சக்கர வண்டி கட்டணம், முதல் கிலோ மீற்றருக்கான கட்டணம் 150 ரூபாவிற்கு மேல் அதிகரிக்குமென அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதல் வற் வரி 18 வீதம் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், எரிபொருளுக்கும் வற் வரி விதிக்கப்படும் எனவும், இதில் பெற்றோல், டீசல் விலை சடுதியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.தற்போது, ​​முதல் கிலோமீற்றருக்கான முச்சக்கரவண்டிக் கட்டணம் 100 ரூபாவாக உள்ள நிலையில், இந்த கட்டணம் எதிரவரும் நாட்களில் 150 ரூபாவிற்கும் மேல் அதிகரிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share this Article