கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 25 பேரையும் பருத்தித்துறை பதில் நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய நிலையில் போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு 2 ட்ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்திய மீனவர்கள் 25 பேரும் படகுகளுடன் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து பருத்தித்துறை பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த மீனவர்கள் 25 பேரையும் இம்மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Share this Article