மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்பாட்டிலிருந்து இடைநிறுத்தம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இலங்கையில் தரக் குறைபாடுகள் காரணமாக, கடந்த ஆண்டு 349 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள், அறுவை சிகிச்சை மற்றும் ஆய்வக பொருட்கள் அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிலிருந்து திரும்பப் பெறப்பட்டதாக தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் கண்டறிந்துள்ளது.

அதே காரணத்திற்காக 32 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் பயன்பாட்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டன.

இதற்கிடையில் கடந்த ஆண்டு 10.73 பில்லியன் மதிப்புள்ள கொரோனாவுக்கு எதிரான ஃபைசர் தடுப்பூசிகளில் 56 சதவீதமானவை, ஜூலை 2022க்குள் பயன்படுத்தப்படாமல் காலாவதியாகிவிட்டன. எனவே அவையும் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டன.

உலக வங்கியின் அவசரகால பராமரிப்பு மற்றும் சுகாதார திட்ட கடன் மூலம் நிதியளிக்கப்பட்ட தடுப்பூசிகள் இதில் அடங்கியிருந்தன.

சுகாதார அமைச்சின் தகவல்படி. 16 பில்லியன் கொரோனா தடுப்பூசிகளில் 56 சதவீதமானவை பயன்பாட்டில் இருந்து ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article