பருத்தித்துறை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 25 பேர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் 25 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகுகள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் நாகபட்டினத்தைச் சேர்ந்தவர்களே எல்லை தாண்டி இலங்கை, பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிடுந்த வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் இன்று பிற்பகல் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share this Article