இரகுபதி நினைவு நூலகத்தின் நூலக அறிமுகம் மற்றும் கதை கூறல் நிகழ்வின் இரண்டாம் அமர்வு நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் எமது நிலையத்தில் அங்கத்தவராகியுள்ள மற்றும் அங்கத்தவராக ஆர்வமுள்ள ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான நூலக அறிமுகம் மற்றும் கதை கூறல் நிகழ்வின் அமர்வு – 2 நாளை (டிசம்பர்9) சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

எமது நிலையத்தின் நூல் இரவல் வழங்கும் பிரிவான இரகுபதி நினைவு நூலகத்தில் உள்ள சிறுவர் பகுதி மற்றும் மாணவர் பகுதி நூல்களை பார்வையிடல் ,மாணவர்களிடையே வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் கதை கூறல் , புத்துணர்வூட்டும் விளையாட்டுகளில் ஈடுபடுத்தல் , மற்றும் மாணவர்களை நூலக வாசிப்பு வட்டத்தின் அங்கத்தவராக்கல், மற்றும் சிறந்த வாசகருக்கான விருது வழங்கல் ஆகிய நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

சிறுவர்களிடம் நூல்களை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் நிகழ்விற்கான வழிகாட்டல் மற்றும் அனுசரணையினை வள்ளித்தமிழ் அமுதம் செயற்பாட்டுக் குழுவினர் தொடர்ந்து வழங்கி இச் செயற்பாட்டினை முன்னெடுக்க முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article