டிஜிட்டல் மயமாகும் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
இலங்கையில் உள்ள இந்து ஆலயங்களின் வரலாற்றில் முதன்முறையாக குறுந்தகவல் மூலமாக ஆலய விடயங்களை அறிந்துகொள்ளக் கூடிய சேவை முறையானது தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தினால் இன்று(டிசம்பர் 6) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேவஸ்தானத்தின் தலைவர் ஆறு திருமுருகனால் ஆரம்பிக்கப்பட்ட இச் சேவையின் மூலம் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தினால் ஆற்றப்பட்டு வரும் பல்வேறு சமூக நலத்திட்ட பணிகள், ஆலய விசேட உற்சவங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய முழுமையான விபரங்களை எவ்வித கட்டண அறவீடுமின்றி இலவசமாக அறிந்து கொள்ள முடியும்.
குறித்த சேவையினை பெற்றுக் கொள்வதற்கு https://www.tellidurga.org என்ற தேவஸ்தானத்தின் இணையத்தள முகவரிக்கு சென்று தங்களுடைய தொலைபேசி இலக்கங்களை பதிவு செய்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
(தொலைபேசி இலக்கங்களை உறுதிப்படுத்தும் நோக்கில் OTP முறை (One-Time Passwords Authenticate System) பயன்படுத்தப்பட்டுள்ளது )
Share this Article