பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நாட்டில் குழந்தைப் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளமையினால் ஐந்து வருடங்களை பூர்த்தி செய்த பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரமாக குறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று(டிசம்பர் 5) தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போதே அமைச்சர் பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

ஐந்து வருடங்களை பூர்த்திசெய்த சுமார் 2 இலட்சத்து 92 ஆயிரம் பாடசாலை மாணவர்கள் தற்போது கல்வி பயின்று வருவதாகவும், பத்து வருடங்களுக்கு முன்னர் 3 இலட்சத்து 40 ஆயிரம் பிள்ளைகள் பாடசாலைகளில் கல்வி பயின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share this Article