இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட ஒரு தொகுதி போதைப்பொருள் சிக்கியது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் ஒரு தொகுதியை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதைப்பொருளின் பெறுமதி சுமார் 43 மில்லியன் ரூபா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது  சந்தேகிக்கப்படும் 25 பொதிகளில் இருந்து  குறித்த போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, மஹரகம, பத்தரமுல்லை, பொரலஸ்கமுவ, பாணந்துறை மொரட்டுவ மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் முகவரிகளுக்கு ஜேர்மனி மற்றும் இங்கிலாந்தில் இருந்து இந்த பொதிகள் அனுப்பப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவை போலி முகவரி என தெரியவந்துள்ளது.

குறித்த பொதியிகளில் 2193 எக்ஸ்டசி என்ற மெத்தம்பெட்டமைன் மாத்திரைகளும், 1740 கிராம் குஷ் போதைப்பொருளும், 29 கிராம் ஆம்பெட்டமைன் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த போதைப்பொருள் கையிருப்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Share this Article