நாரந்தனையில் குருபூசையும் சிறப்புச் சொற்பொழிவும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட வாராந்த பெரிய புராண சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் ஊர்காவற்றுறை, நாரந்தனை வடக்கு பண்டாரபுலம் ‘தான்தோன்றி ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலய பிரதான மண்டபத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

சேக்கிழார் பெருமானின் குரு பூஜையைத் தொடர்ந்து தமது உடைமைகள் யாவும் சிவனடியார் உடைமையாகவே எண்ணி வாழ்ந்த நாயனார் என்னும் விடயப்பொருளில் அமைந்த சிறப்புச் சொற்பொழிவை இளஞ் சைவப்புலவர் ச.நவநீதன் நிகழ்த்தவுள்ளார்.

Share this Article