வெளியாகின க.பொ.த சாதா­ரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

2022 ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த (சா.தர) பரீட்சை இந்த வருடம்(2023) நடைபெற்றது. அதன் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை பரீட்­சைகள் திணைக்களம் 2023(2022) கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகளை  வெளியிட்டுள்ளது.

குறித்த பரீட்­சை பெறு­பே­றுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே 29 ஆம் திகதி 3,568 தேர்வு மையங்களில் நடைபெற்றிருந்தது.

குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

அவர்களில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

Share this Article