பருத்தித்துறையில் வாள்வெட்டு!- இளைஞர் ஒருவர் படுகாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் கந்தவுடையார் வீதி, பருத்தித்துறை என்ற முகவரியைச் சேர்ந்த 23 வயதுடைய ஜெயச்சந்திரன் டிலக்சன் என்ற இளைஞரே படுகாயம் அடைந்துள்ளார்.

குறித்த இளைஞர் வீதியில் சென்றுகொண்டிருந்த வேளை அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இருவர், அவரை வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share this Article