சித்தங்கேணி இளைஞன் கொலை வழக்கில் பொலிஸார் மூவரைக் கைது செய்ய உத்தரவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் சித்தங்கேணி இளைஞன் கொலை வழக்கில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸார் மூவரை கைது செய்யுமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று எடுத்து கொள்ளப்பட்டது.

இதன் போதே நீதிபதி குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கொலைச் சந்தேகநபர்களான பொலிஸாரில் இருவர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Article