யாழில் பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் மோட்டார் சைக்கிள் தீக்கிரை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

மருதங்கேணி நித்தியவெட்டை பகுதிக்கு கடமை நிமித்தம் தனது மோட்டார் சைக்கிளில் சென்று, மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்தி விட்டு, வீடொன்றில் விசாரணை நடவடிக்கையை மேற்கொண்டபோது, வீதியில் நின்ற மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

தீ வைத்தவர்கள் தப்பிச் சென்ற நிலையில் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article