மயிலத்தமடு மேய்ச்சல் தரவையில் மாடுகளை கொன்றவர்கள் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரவைப் பகுதிகளில் கால்நடைகளை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தப் பகுதிகளில் கால்நடைகள் தொடர்ந்தும் சுட்டுக்கொல்லப்படுகின்றமை தொடர்பில், கால்நடை பண்ணையாளர்களால் பொலிஸாரிடம் முறையிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வாழைச்சேனைப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இருவர் கைதாகியுள்ளனர்.

அவர்களிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Article