மகனின் செயலால் மரணித்த தந்தை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மகன் உயிரை மாய்க்க முயன்றார் என்ற தகவலை அறிந்த தந்தையின் உயிர் ஏக்கத்தில் பிரிந்துள்ளது.

கோப்பாய் மத்தியைச் சேர்ந்த முத்துத்தம்பி விவேகானந்தன் (வயது 71) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தன் மகன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முயற்சித்தார் தகவலைக் கேட்ட இவர் வீட்டில் மயங்கிச் சரிந்து உயிரிழந்துள்ளார் என்று இறப்பு விசாரணைகளில் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இதேவேளை தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்றாதாகக் கூறப்படும் அவரது மகன் யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article